search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியை கொலை"

    குறிஞ்சிப்பாடியில் ஒருதலை காதலால் ஆசிரியையை கொன்ற வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #KurinjipadiMurder

    உளுந்தூர்பேட்டை:

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பழைய ஆஸ்பத்திரி வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் ரம்யா (வயது 22). இவர் எம்.சி. படித்துள்ளார். ரம்யா குறிஞ்சிப்பாடி கடைவீதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் ஆசிரியையாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தார்.

    விருத்தாசலத்தை அடுத்த விருத்தகிரி குப்பத்தை சேர்ந்த அரங்கண்ணல் மகன் ராஜசேகர் (23). இவர் டிப்ளமோ படித்துவிட்டு கடலூர் சிப்காட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரம்யா கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்தபோது பஸ்சில் சென்று வந்துள்ளார். அப்போது ராஜசேகர், ரம்யாவை பார்த்துள்ளார். அப்போது அவருக்கு ரம்யா மீது காதல் ஏற்பட்டது. அவரை ஒருதலையாக காதலித்தார்.

    தன்னை காதலிக்கும்படி ராஜசேகர் ரம்யாவிடம் பலமுறை வற்புறுத்தி உள்ளார். ஆனால் அவர் காதலை ஏற்க மறுத்ததால் ரம்யா மீது ஆத்திரம் அடைந்தார். தன்னை காதலிக்க மறுத்ததால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறிஞ்சிபாடி பள்ளி வளாகத்தில் புகுந்து ஆசிரியை ரம்யாவை கழுத்தை அறுத்து கொன்று விட்டு ராஜசேகர் தலைமறைவாகிவிட் டார்.

    இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். ராஜசேகரை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், இன்ஸ்பெக்டர்கள் ராமதாஸ், மீனாலட்சுமி, டெல்டா பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் தலைமையில் மொத்தம் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் ராஜசேகரின் சொந்த ஊரான விருத்தகிரி குப்பத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    பின்னர் ராஜசேகரின் செல்போன் சிக்னல் மூலம் அவர் பதுங்கி இருக்கும் இடத்தை கண்டறியும் முயற்சியில் இறங்கினர். அதன்படி அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டனர். அப்போது பண்ருட்டி அருகே உள்ள சேந்தநாடு காட்டுபகுதியை டவர் காட்டியது. இந்த இடம் விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் அருகே அமைந்துள்ளது. எனவே ராஜசேகர் அங்குள்ள காட்டு பகுதியில் பதுங்கி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர்.

    இதனைத்தொடர்ந்து நேற்று காலை டெல்டாபிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் அந்த காட்டு பகுதிக்கு சென்றனர். ராஜசேகரின் தந்தை அரங்கண்ணலையும் உடன் அழைத்து சென்றனர். அவர்கள் நேற்று மாலை 5 மணிவரை அந்த பகுதியில் சல்லடைபோட்டு தேடினர். எங்கும் ராஜசேகரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இன்று காலை தனிப்படை போலீசார் மீண்டும் 2-வது நாளாக காலை அங்கு சென்று தேடினர். அங்குள்ள கிணறு மற்றும் குளங்களில் ராஜசேகர் விழுந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்திலும் தேடினர்.

    இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள தொப்புளான்குளம் முந்திரிகாட்டு பகுதிக்கு இன்று காலை அந்த பகுதியை சேர்ந்த சிலர் சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு மரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    உடனே அவர்கள் இதுகுறித்து திருநாவலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு தூக்கில் தொங்கிய வாலிபர் பிணத்தை மீட்டனர். அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று கிடந்தது.

    இதனைத்தொடர்ந்து போலீசார் தூக்கில் தொங்கிய வாலிபர் யார் என்று விசாரித்தபோது அது குறிஞ்சிப்பாடியில் ஆசிரியை ரம்யாவை கொன்ற வாலிபர் ராஜசேகர் என்பது தெரியவந்தது. உடனடியாக திருநாவலூர் போலீசார் இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் குறிஞ்சிப்பாடி இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு தூக்கில் தொங்கிய ராஜசேகரின் உடலை மீட்டனர். மேலும் அங்கு கிடந்த மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றினர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் ஆசிரியை ரம்யாவை கொன்ற வாலிபர் தன்னை போலீசார் தீவிரமாக தேடுவதை அறிந்து முந்திரி மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    ஆசிரியை கழுத்தை அறுத்து கொன்ற வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #KurinjipadiMurder

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே குடும்ப தகராறில் கம்பியால் தாக்கி ஆசிரியை கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவருடைய கணவரை போலீசார் கைது செய்தனர்.
    கமுதி:

    கமுதி அருகே உள்ள அபிராமம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோட்சே (வயது 32) வேன் டிரைவர். இவரது மனைவி லதா (30).

    இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகின்றன. அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் லதா ஆசிரியை வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அவர் திடீரென மாயமானார். இந்த நிலையில் நேற்று ஊருக்கு வந்த லதா, தான் சேலத்தில் வசிப்பதாகவும், துணிகளை எடுத்துச் செல்ல வந்ததாகவும் கூறினார்.

    அதன்படி துணிகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டார். பஸ் நிறுத்தம் அருகே லதா சென்றபோது, மோட்சே மறித்து தகராறு செய்தார். மேலும் அவர் இரும்பு கம்பியாலும் தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த லதா ரத்த வெள்ளத்தில் பிணமானார்.

    இதுகுறித்த தகவல் கிடைத்ததும் கமுதி போலீஸ் துணை சூப்பிரண்டு சண்முகசுந்தரம், அபிராமம் இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். லதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி மோட்சேயை கைது செய்தனர்.
    ஒருதலை காதலால் ஆசிரியை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #KumbakonamMurder
    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் 108 சிவாலயம் பகுதியை சேர்ந்தவர் குமரவேல். இவரது மகள் வசந்தபிரியா (வயது 25). இவர் கும்பகோணம் லால்பகதூர் சாஸ்திரி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

    இந்தநிலையில் வசந்தபிரியாவுக்கும், வலங்கைமானை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இடையே கடந்த 28-ந்தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வருகிற தை மாதத்தில் திருமணம் நடத்த இருவீட்டார் சார்பிலும் முடிவு செய்யப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் கும்பகோணம் அருகே உள்ள உமாமகேஸ்வரபுரம் செல்லும் சாலையில் காவிரி ஆற்றின் கரையோரத்தில் நேற்று மாலை மர்மமான முறையில் வசந்தபிரியா கொடூரமாக கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் டி.எஸ்.பி.க்கள் ராமச்சந்திரன், செங்கமலகண்ணன், இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், மணிவேல், மகாதேவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வசந்தபிரியா உடலை கைப்பற்றினர். பிறகு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலை செய்யப்பட்ட இடத்தில் 2 செல்போன்கள் மற்றும் புதிய சிறிய வடிவிலான பேனாகத்தி கிடந்தது.

    தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரும் நேரில் வந்து விசாரணை நடத்தினார். பின்னர் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அதில் ஆசிரியை வசந்தபிரியா, ஒரு வாலிபருடன், மோட்டார் சைக்கிளில் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

    ஆசிரியை வசந்தபிரியா

    இதனால் மோட்டார் சைக்கிளில் வசந்தபிரியாவை அழைத்து சென்ற வாலிபர் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் வசந்தபிரியாவின் உறவினர்களிடம் வாலிபரின் உருவபடத்தை காட்டி அடையாளம் தெரிகிறதா? என்று கேட்டனர்.

    அப்போது உறவினர்கள் அந்த வாலிபர், வசந்த பிரியாவின் மாமா மகன் நந்தகுமார் (வயது 34) என்று தெரிவித்தனர்.

    இதையடுத்து கடலூர் மாவட்டம், திட்டக்குடியில் பதுங்கி இருந்த நந்தகுமாரை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர். பிறகு அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    ஆசிரியை வசந்த பிரியாவை நந்தகுமார் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்தநிலையில் வசந்தபிரியாவுக்கு, வேறொரு வாலிபருடன் நிச்சயதார்த்தம் நடந்ததால் நந்தகுமார் அதிர்ச்சி அடைந்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அவர் நேற்று மாலை ஆசிரியை வசந்தபிரியாவிடம் நைசாக பேச்சு கொடுத்து அழைத்து சென்றார். அங்கு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். ஆனால் வசந்தபிரியா மறுத்து திட்டியதால் ஆத்திரம் அடைந்த நந்தகுமார் பேனா கத்தியால் கழுத்தில் குத்தி அவரை கொலை செய்தது தெரியவந்தது.

    ஒருதலை காதலால் ஆசிரியை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆசிரியையின் தலையை துண்டித்து கொலை செய்த நபர், தலையை 5 கி.மீ. தூரத்திற்கு தூக்கிக்கொண்டு காட்டுக்குள் ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #teacherkilled
    ஜாம்ஷெட்பூர்:

    ஜார்க்கண்ட் மாநிலம் செராய்கெலா-கர்ஸ்வான் மாவட்டத்தில் இயங்கி வரும் கப்ரசாய்  துவக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் சுக்ரா ஹெசா (30). நேற்று மதிய உணவு இடைவேளையின் போது, உணவு வழங்கப்பட்டுக்கொண்டிருந்த இடத்தை நோக்கி வந்த ஒரு நபர், திடீரென ஆசிரியை சுக்ராவை தரதரவென இழுத்து சென்றுள்ளார். 

    தனது வீடு வரை இழுத்துச்சென்ற அந்த மர்ம நபர் வீட்டிலிருந்த அரிவாளை எடுத்துக்கொண்டு, ஆசிரியையின் தலையை மட்டும் தனியாக துண்டித்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அவர் மீது கல் வீசி தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். உடனே அந்த நபர் சுக்ராவின் துண்டிக்கப்பட்ட தலையை மட்டும் எடுத்துக்கொண்டு சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றுள்ளார்.

    இதனால் பதறிப்போன பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இந்த சம்பவம் அறிந்து வந்த காவல்துறையினர், வனப்பகுதியில் பதுங்கியிருந்த கொலையாளியை கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயரை ஹரி ஹெம்ப்ராம்  (26) என்பதும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.

    போலீசாரின் பிடியில் இருந்த ஹரி மீது, பொதுமக்கள் சிலர் பலமாக தாக்குதல் நடத்தியதால், படுகாயமடைந்த ஹரி தற்போது ஜாம்ஷெட்பூரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  #teacherkilled #tamilnews
    ×